கலிஃபோர்னியாவில் வணிக வளாகம் ஒன்றில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு... 9 வயது சிறுமி படுகாயம்

0 2862

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 9 வயது சிறுமி காயமடைந்துள்ளார்.

விக்டர் வில்லி நகரத்தில் உள்ள வணிக வளாகத்திற்குள் நேற்று மாலை 7 மணியளவில் புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து  பதற்றத்தை தணிக்கும் வகையில் வணிகவளாகம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.

காயம் அடைந்த சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படும் நிலையில், வணிக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments