மரியுபோல் நகரில் 1,026 உக்ரைன் வீரர்கள் சரண் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்

0 3035

மரியுபோல் நகரில் 1,000 உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மரியுபோல் நகரில் ஒரு மாதத்துக்கு மேலாக ரஷ்ய படைகள் முற்றுகையிட்டுள்ளன. அங்குள்ள உக்ரைன் ராணுவத்தினர் மீது ரஷ்ய படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என அதிபர் செலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் கடற்படையின் 36-வது பிரிகேட்டை சேர்ந்த 1,026 வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments