அரக்கோணத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள்.!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மதுபோதையில் 3 இளைஞர்கள், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சுவால்பேட்டை நரசிம்ம செட்டி தெருவில் மதுபோதையில் தள்ளாடியபடி வந்த 3 இளைஞர்கள், அங்கிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியும், தடுக்க வந்த வாகன உரிமையாளர்களை தாக்கவும் முற்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, சிசிடிவி ஆதாரத்துடன் அரக்கோணம் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பரசுராமன் என்ற இளைஞனை கைது செய்த போலீசார், ஜெகன் என்பவனை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Comments