சாலையை பைக்கில் கடக்க முயன்றவர் மீது மற்றொரு பைக் மோதல்... வெளியான சிசிடிவி காட்சி

0 2301

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, இரு சக்கர வாகனங்கள் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மல்லியம் கிராமத்தில் செழியன் என்பவர் தனது பைக்கில், சாலையை கடக்க முயன்றார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து அஜய் ராம் என்பவர் பைக்கில் தனது நண்பருடன் வேகமாக வந்துள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பைக்குகளும் மோதியதில், செழியன் படுகாயமடைந்தார். அவர், மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments