கைத்துப்பாக்கியுடன் சென்ற பள்ளி ஆசிரியை கைது

0 3693

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி எடுத்துச் சென்ற ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெயின்புரி நகரில் உள்ள கோட்வாலி பகுதியில் சந்தேகப்படும் வகையில் சென்ற ஒரு பெண்ணை போலீசார் சோதனையிட்டபோது, அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் கைத்துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பாக்கியை பறிமுதல் செய்து, அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவரது பெயர் கரிஷ்மா சிங் யாதவ் என்பதும் பெரோசாபாத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியை பணியில் இருப்பதும் தெரிந்தது. கரிஷ்மா சிங்கை கைது செய்த போலீசார், துப்பாக்கியை எதற்காக எடுத்துச் சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments