கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற வாகன ஓட்டி உட்பட 3 பேர் மீது மோதிய சரக்கு வாகனம்... பதறவைக்கும் காட்சி

0 5209

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில், சாலை வளைவில் திரும்பிய சரக்கு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பில் சென்றுக்கொண்டிருந்த இந்த சரக்கு வாகனம், கட்டுப்பாட்டை இழந்ததில் 75 வயது முதியவர் உட்பட 3 பேர் மீது பயங்கரமாக மோதியது.

இதில், 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சரக்கு வாகன ஓட்டுனர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமான சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments