ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

0 2156
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்றும் 320ரூபாய் அதிகரித்து, 39ஆயிரத்து896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்து வரும் நிலையில், 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ஆயிரத்து416ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு 40ரூபாய் உயர்ந்து 4ஆயிரத்து987ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 39ஆயிரத்து896ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ஆயிரத்து 100ரூபாய் உயர்ந்து 73ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments