கனமழை எதிரொலியால் கோவிலுக்குள் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்... பக்தர்கள் கடும் அவதி

கனமழை எதிரொலி - கோவிலுக்குள் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்... பக்தர்கள் கடும் அவதி
திருநெல்வேலியில் பெய்த கனமழையினால் நாங்குநேரி பெருமாள் கோவிலுக்குள் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த கோடை மழையால், வானமாமலை பெருமாள் கோவிலில் மழை நீர் புகுந்தது.
வடக்கு மற்றும் தெற்கு மாட வீதிகளிலிருந்து பாய்து வந்த மழைநீர், கழிவுநீருடன் கலந்து கோபுற வாசல் வழியாக மண்டபத்திற்குள் புகுந்து, பிரகாரங்களில் அதிகளவில் தேங்கி நின்றது.
தொடர்ந்து மின் மோட்டார் மூலம் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Comments