சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு… 16 பேர் படுகாயம் - மர்ம நபர் வெறிச் செயல்

0 2447

அமெரிக்கா நியூயார்க்கில் சுரங்க ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்தனர்.

புருக்ளின் நகர ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலையில் பொது மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ரயில் நிலைய பகுதியில் கண்ணீர் புகை குண்டு போன்ற பொருளை வீசிய முகமூடி அணிந்த நபர், திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

திடீர் தாக்குதலில் 16 பேர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். சம்பவ இடத்தில் போக்குவரத்தை முடக்கிய போலீசார், கொடூரச் செயலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments