தென் ஆப்பிரிக்காவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு கடலோர பகுதியான குவாஹுலு-நடாலா நகரில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
போக்குவரத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Comments