அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் தாய் உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

0 1417
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் தாய் உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

அமெரிக்காவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான கேத்தரின் தாய், உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா அமெரிக்கா வர்த்தகத்தை புதுப்பித்திருப்பதாக டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

இரு தரப்பு கூட்டுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தியிருப்பதாக கேத்தரினும் தமது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். இன்று வாஷிங்டனில் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கினுடன் ஹோவார்ட் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் அறிஞர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

இந்தியா -அமெரிக்கா உயர்கல்வி தொடர்பான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் அரங்கேற உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments