இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு ; டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 11 மணி நேரம் விசாரணை

0 8600
டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 11 மணி நேரம் விசாரணை

அதிமுக இரண்டாக உடைந்த போது தமது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

காலை 11.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் வந்த தினகரன் இரவு 11 மணிக்கு மேல் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தாம் சென்னை திரும்புவதாகத் தெரிவித்தார். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டதாகவும் தாம் குற்றமற்றவர் என்றும் தினகரன் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments