தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் நாளை சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை

0 2734
தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் நாளை சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் நாளை சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதைபோல பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல்17-ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில், தமிழ் வருட பிறப்பையொட்டி வரும் 14 ஆம் தேதியும், புனித வெள்ளியையொட்டி வரும் 15 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை நாளாக உள்ளது.

வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை என்பதால் வரும் 16 ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து 16 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments