விஜய் போன்ற கடின உழைப்பாளியை பார்த்தது இல்லை - செல்வராகவன்

0 4669
விஜய் போன்ற கடின உழைப்பாளியை பார்த்தது இல்லை - செல்வராகவன்

நாளை பீஸ்ட் திரைப்படம் வெளிவர உள்ள நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இயக்குனர் நெல்சன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் செல்வராகவன், நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் இதில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய இயக்குனர் நெல்சன், பீஸ்ட் திரைப்படத்தின் கதையை கேட்ட நடிகர் விஜய் படத்தில் கஷ்டப்பட்டு நடிக்க தான் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார் என்றார்.

மேலும், படப்பிடிப்பின் போது ஏற்படும் பிரச்சனைகளை விஜய் சரி செய்துகொடுத்ததாக நெல்சன் தெரிவித்தார்.

நடிகர் விஜய் போன்ற கடின உழைப்பாளியை பார்த்தது இல்லை என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments