முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே குண்டு வீச்சு ; ஒருவர் கைது

0 2236
முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே குண்டு வீச்சு ; ஒருவர் கைது

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே குண்டு வீச்சு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் நாளந்தா நகரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நிதீஷ் குமார் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற மேடைக்கு அருகே திடீரென குண்டு வெடித்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவர் நாட்டு வெடிகொண்டு வீசியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், நிதிஷ்குமாரை பத்திரமாக அழைத்துச்சென்றனர். சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments