தஞ்சாவூரைச் சேர்ந்த ரவுடி 'கட்ட' ராஜாவிற்கு தூக்குத் தண்டனை விதிப்பு..!

0 3734

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ராஜா என்கிற கட்டை ராஜா என்பவனுக்கு கும்பகோணம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் கடைவீதியில் செந்தில் நாதன் என்பவரை கட்டை ராஜா அவனது கூட்டாளிகள் மாரியப்பன், ஆறுமுகம் ,மனோகரன், செல்வம் ,ஆகியோர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கும்பகோணம்  மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சியங்கள் கூற பயந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் மாரியப்பன் ,மனோகரன், ஆகியோர் உயிரிழந்த நிலையில், ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments