பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பயங்கர விபத்து.!

0 5189

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், 13 வயது சிறுமி உட்பட கணவன்-மனைவி விபத்தில் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஊஞ்சவெலம்பட்டியை சேர்ந்த ராஜூ என்பவர் அவரது மனைவி மற்றும் மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு கஞ்சம்பட்டி மருத்துவமனை செல்வதற்காக பொள்ளாச்சி-உடுமலை நெடுஞ்சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, உடுமலையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அதிவேகமாக கார் ஒன்று ராஜுவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. தகவலறிந்து வந்த போலீசார், அதிவேகமாக காரை இயக்கிய பழநியை சேர்ந்த கார்த்திக் காமாட்சி என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments