புனேவில் கார் மீது மோதி உணவக பார்க்கிங்கிற்குள் புகுந்த சொகுசு பேருந்து.!

0 1633

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கார் மீது மோதிய சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள உணவக பார்க்கிங்கிற்குள் புகுந்து கவிழ்ந்தது.

புனே அடுத்த பஜ்ரங்வாடி பகுதியில் சாலையின் மறுபுறத்தை கடக்க முயன்ற கார் மீது மோதிய சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து அருகில் உள்ள உணவகத்தின் கார் பார்க்கிங்கிற்குள் புகுந்தது.

அங்கிருந்த கார்களை முட்டித் தூக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் பேருந்தில் பயணித்த 25 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments