ஒருதலைக் காதலில் ஒரு பெண்ணிற்காக அரசுப்பள்ளி மாணவனுக்கும் அரசு பாலிடெக்னிக் மாணவனுக்கும் மோதல்

0 2519

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஒருதலைக் காதலில் ஒரு பெண்ணிற்காக பள்ளி மாணவனும் பாலிடெக்னிக் மாணவனும் இருவேறு குழுக்களாக சேர்ந்து பேருந்து நிலையத்தில் மோதலில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் காலை வழக்கம்போல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது அரசுப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கும் அரசு பாலிடெக்னிக் மாணவன் ஒருவனுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் ஆதரவாக மேலும் சில மாணவர்கள் சேரவே, சிறிது நேரத்தில் குழு மோதலாக மாறியது.

தகவலறிந்து வந்த போலீசார் மோதலை விலக்கி, சம்மந்தப்பட்ட 2 மாணவர்கள் உட்பட 4 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் மோதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் ஒரே மாணவியை ஒருதலையாகக் காதலிக்கின்றனர் என்றும் அதனால் ஏற்பட்ட மோதல் என்றும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments