வட கொரிய அதிபராக "கிம் ஜாங் உன்" பதவி ஏற்று 10 ஆண்டுகள் நிறைவு

0 2380

வட கொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவி ஏற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற கட்சியின் தேசிய கூட்டத்தில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

அப்போது பேசிய முக்கிய அதிகாரி ஒருவர், வட கொரியாவின் அணு சக்தி திட்டத்தை கிம் ஜாங் உன் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்தார். இதுவரை வட கொரியா நிகழ்த்திய 6 அணு ஆயுத சோதனைகளில் 4 சோதனைகள் கிம் ஜாங் உன்-னின் ஆட்சியில் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் ஏராளமான ஏவுகணை சோதனைகளும் அண்மையில் நடைபெற்றதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments