ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து.. படுகாயம் அடைந்த 6 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 710
ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து.. படுகாயம் அடைந்த 6 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குஜராத்தில் உள்ள ரசாயான தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பரூச் மாவட்டத்தில் டஹேஜ் பகுதியில் அமைந்துள்ள இயற்கை ரசாயன தொழிற்சாலையில் நேற்றிரவு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிகளை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த 6 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வெடிவிபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments