தமிழகத்தில் 550 கோவில்களில் இணையவழிக் கட்டணச் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

0 649
தமிழகத்தில் 550 கோவில்களில் இணையவழிக் கட்டணச் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் 550 கோவில்களில் இணையவழியில் 255 கட்டணச் சேவைகள் வழங்கும் திட்டத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறநிலையத்துறைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவில் சொத்துக்களுக்கான குத்தகை, வாடகைத் தொகைகளுக்கு கோவில்களில் ரசீது வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு இணையவழியில் ரசீது பெற இந்து அறநிலைத்துறையின் இணையத் தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சனைக் கட்டணம், அபிஷேகக் கட்டணம், திருமணக் கட்டணம் உள்ளிட்ட 255 வகையான சேவைகள் இணையவழியிலும் கோவில்களில் கணினிவழியாகவும் வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments