நடிகர் விஜய்யின் சொகுசு காரில் பீஸ்ட் குழுவினர் ஜாலி ரெய்ட்.. இணையத்தில் வீடியோ வைரல்

0 4889
நடிகர் விஜய்யின் சொகுசு காரில் பீஸ்ட் குழுவினர் ஜாலி ரெய்ட்.. இணையத்தில் வீடியோ வைரல்

நடிகர் விஜய் தனது சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் படக்குழுவினரை ரெய்டுக்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்துக்கு டிக்கெட் புக்கிங்க் மும்முரமாக நடந்துவருகிறது.

வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராயல்ஸ் காரில் பீஸ்ட் படகுழுவினரை அழைத்து சென்று உற்சாகப்படுத்தினார்

நடிகர் விஜய் ஓட்டிய அந்த காரில் இயக்குனர் நெல்சன், மனோஜ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், சதீஷ் ஆகியோர் பயணித்தனர்.

பீஸ்ட் படப்பிடிப்பின் போது காரில் பயணித்த வீடியோவை தற்போது வெளியிட்டு உள்ளனர்.

நடிகர் விஜயுடன் சொகுசு காரில் ஜாலியாக சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments