கும்பகோணத்தில் முன் அனுமதி பெறாமல் உள்ளரங்கு போராட்ட கூட்டம் நடத்த முயன்ற 8 பேர் கைது.!

0 8974

கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் முன் அனுமதி பெறாமல் உள்ளரங்கு போராட்ட கூட்டம் நடத்த முயன்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாக சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் திருமண மண்டபத்தில் காவலர்களுக்கு எதிரான கருத்தரங்கு கூட்டத்தை அனுமதி பெறாமல் நடத்த முயன்றதாக இளைஞர் அரண் என்ற அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர் உள்பட 5 பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments