மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்.. கொரோனாவை விட அதிக மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை

0 2965
மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்.. கொரோனாவை விட அதிக மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை

இலங்கையில் 3வது நாளாக இரவு நேரத்திலும் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சில நாட்களுக்குள் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்யாவிட்டால் கோவிட்டை விட அதிகளவுக்கு மரணங்களை இலங்கையில் காண நேரிடும் என்று மருத்துவர்கள் குழுவினர் கடிதம் வழியாக கோத்தபயா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments