உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வேனில் சென்றவர்களிடம் கைவரிசை.. 264 சவரன் தங்க நகை கொள்ளை

0 1587
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வேனில் சென்றவர்களிடம் கைவரிசை.. 264 சவரன் தங்க நகை கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வேனில் சென்றவர்களிடம் 264 சவரன் தங்க நகையை கைவரிசை காட்டிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் தன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் டெம்போ டிராவலர் வேனில் விளாத்திகுளம் நோக்கி பயணித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் பகுதியில் உணவருந்த நிறுத்திய போது வேனின் மேற்பகுதியில் வைத்திருந்த நகைப் பையை காணவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை வேன் கடக்கும் நகைப்பை இருந்ததை சிசிடிவி மூலம் போலீசார் உறுதி செய்தனர்.

முன்னதாக தேநீர் அருந்த விழுப்புரம் அருகே வேனை நிறுத்திய போது நகை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதிய போலீசார் டீக் கடையில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்த சரவர இயங்கவில்லை.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments