அறுவடை இயந்திரத்தில் ஏற்பட்ட நெருப்பினால் கோதுமை வயல்களில் தீ விபத்து.. 200 ஏக்கர் கோதுமைப் பயிர்கள் நாசம்

0 983
அறுவடை இயந்திரத்தில் ஏற்பட்ட நெருப்பினால் கோதுமை வயல்களில் தீ விபத்து.. 200 ஏக்கர் கோதுமைப் பயிர்கள் நாசம்

ஹரியானாவில் கோதுமை வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 ஏக்கர் கோதுமை பயிர்கள் எரிந்து நாசமாயின.

கர்னாலின் கச்வா என்ற கிராமத்தில் கோதுமை அறுவடைப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது அறுவடை இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சில நிமிடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பெரும் சிரமத்திற்குப் பின் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் 200 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த கோதுமைப் பயிர்கள் நாசமாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments