புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.!

0 1118

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இரு கட்டங்களாக நடைபெறும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 4 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றது. முதல் சுற்றில் குறைந்தது 50 சதவீதம் வாக்குகளைப் பெறும் நபர்கள் தேர்தலில் வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

இந்நிலையில்,எந்த வேட்பாளருக்கும் 50 வாக்குகள் பெறவில்லை என்றால், முதல் 2 இடங்களைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டும் பங்குபெறும் 2-ஆம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments