டெல்லியில் பசுக்களை களவாடிய கொள்ளையர்களை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்று கைது செய்த போலீசார்.!

0 1833

டெல்லியில் பசுக்களை களவாடிய கொள்ளையர்களை சினிமா சேஸிங் பாணியில் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

கால்நடைகளை திருடிய கொள்ளைக் கும்பல் காவலர்களை கண்டதும் மினி வேனை வேகமாக செலுத்தி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பாதி வழியில் மினி வேனை போலீசார் பஞ்சர் செய்த நிலையில் காவலர்களின் கவனத்தை திசைத் திருப்ப வேனில் இருந்த பசுக்களை கொள்ளைக் கும்பல் சாலையில் தூக்கி வீசியுள்ளது.

22 கிலோ மீட்டர் விரட்டிச் சென்ற போலீசார் குருகிராம் எல்லையில் கொள்ளைக் கும்பலை மடக்கிப் பிடித்தனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கிகள், தோட்டக்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments