'சொர்க்கத்தில் உன்னை சந்திக்கிறேன் அம்மா' போரில் இறந்த தாயின் நினைவாக கடிதம் எழுதிய உக்ரைன் சிறுமி

0 1420

போரில் தனது தாயை இழந்த உக்ரைன் சிறுமி, அவரது நினைவாக உருக்கமாக எழுதிய கடிதம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

அந்நாட்டின் போரோடியன்கா நகரில் பலியான பெண் ஒருவரின் நினைவாக அவரது 9 வயது மகள் எழுதிய கடிதத்தை உள்துறை அமைச்சரின் ஆலோசகரான ஆண்டன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தனது தாய் உலகத்திலேயே மிகச்சிறந்த தாய் என்றும், தற்போது சொர்க்கத்தில் அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என நம்புவதாகவும் கடிதத்தில் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நல்ல மனிதராக வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தான் சொர்கத்தில் இடம்பெற்று, அங்கு தனது தாயை சந்திப்பேன் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. உக்ரைன் சிறுமியின் கடித்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments