ஜல்லிக்கட்டு போட்டியில் களேபரம் - தடியடி நடத்தி அத்துமீறிய காளை உரிமையாளர்களை விரட்டிய போலீசார்

0 1267

மதுரை கரடிக்கல் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி போலி டோக்கன் குளறுபடி காரணமாக பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசாருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு தடியடியில் முடிந்தது.

சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பிற்பகலில் போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளை கொண்டு வரும் பிறவாடி என்று சொல்லக்கூடிய பகுதியில், ஒரே எண் கொண்ட டோக்கன்களுடன் சென்ற சில காளை உரிமையாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

போட்டிக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குளறுபடி இருப்பது தெரிய வந்ததை அடுத்து போட்டி பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காளை உரிமையாளர்கள், காளைகளை அனுமதிக்கக் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் அனுமதிக்காத ஆத்திரத்தில் காளை உரிமையாளர்கள் காளைகளை திறந்தவெளியில் அவிழ்த்துவிட்ட நிலையில், அவை பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தன. இதனையடுத்து லேசான தடியடி நடத்திய போலீசார் அத்துமீறிய காளை உரிமையாளர்களை விரட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments