’தினுசாய் ஒரு திருட்டு’ திருமணமான மகள் இருப்பதை மறைத்து வாலிபரை மணந்து, ஒரே மாதத்தில் பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண்…

0 13661

திருமணமான மகள் இருப்பதை மறைத்து, ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரை மணந்த நெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டிலிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு தப்பிய நிலையில், போலீசில் சிக்கியுள்ளார்.

ஈரோடு - கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கதிரவன் என்பவருக்கு 38 வயது ஆகும் நிலையில், திருமணத்துக்காகப் பெண் தேடியுள்ளார்.

நண்பர்கள் மூலமாக நெல்லையைச் சேர்ந்த தில்லைதுரைச்சி என்பவரது தொடர்பு எண் கிடைத்து, அவர் மூலம் 37 வயதான கவிதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவரும் திருமணத்துக்காக வரன் பார்த்து வருகிறார் எனக் கூறி, கதிரவனுக்கும் கவிதாவுக்கும் கடந்த மாதம் திருமணம் செய்து வைத்து தம்பதி உடனேயே தில்லை துரைச்சி தங்கி இருந்துள்ளார். ஒரு மாதம் கடந்த நிலையில், சனிக்கிழமை காலை திடீரென தில்லை துரைச்சியும் கவிதாவும் மாயமாகியுள்ளனர்.

வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணமும் மாயமாகியுள்ளது. நெல்லை சென்ற கதிரவன் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் கவிதாவுக்கு திருமணமாகி 2 மகள்கள் இருப்பதும் அவர்களில் ஒருவருக்கு திருமணமே ஆகிவிட்டதும் தெரியவந்தது. இந்த மோசடிப் பெண்கள் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருக்கின்றனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments