ஹேக் செய்யப்பட்ட யு.ஜி.சி அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மீட்பு..!

0 1522

மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக அரசின் டுவிட்டர் கணக்குகளை குறிவைத்து மர்ம நபர்கள் ஹேக் செய்து வருகின்றனர். உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகிய இரண்டு அரசாங்க டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில், அவை மீட்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, இரண்டே நாட்களில் மூன்றாவது சம்பவமாக யுஜிசி டிவிட்டர் பக்கம் அதிகாலையில் ஹேக் செய்யப்பட்டது. சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் பேர் பின்தொடரும் இந்த டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட பின், அதில் பல அர்த்தமற்ற பதிவுகள் பதிவிடப்பட்டதோடு, முகப்பு படத்தில் கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டன.

தற்போது யு.ஜி.சியின் டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments