தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது பயங்கரமாக மோதிய ரயில்.. நூலிழையில் உயிர் பிழைத்த குடும்பம்..

0 2021
அர்ஜெண்டினாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி சில அடி தூரத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவத்தில், காரில் பயணித்த குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

அர்ஜெண்டினாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி சில அடி தூரத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவத்தில், காரில் பயணித்த குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் திடீர் பழுதால் நகர முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் வந்த ரயில், காரின் மீது மோதி சிறிது தூரத்திற்கு இழுத்துச் சென்று நின்றது.

ரயில் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் காரில் பயணித்த 3 குழந்தைகள், பெண் உள்பட ஒரே குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments