பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1208
பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகம் உள்ளிட்டவற்றை காக்க அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், பிரச்சனைகளை எதிர்கொள்ள தென்மாநில முதலமைச்சர்களின் குழு அமைக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments