ஒன்றரை வயது பெண் குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்ட சில்வர் பாத்திரம் ; நீண்ட நேரம் போராடி அகற்றிய தீயணைப்புத்துறையினர்

0 1416
ஒன்றரை வயது பெண் குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்ட சில்வர் பாத்திரம்

சென்னை அம்பத்தூர் அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்ட சில்வர் பாத்திரத்தை நீண்ட நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் அகற்றினர்.

பாடி பகுதியைச் சேர்ந்த வினோத் ராஜ் என்பவரது ஒன்றரை வயது பெண் குழந்தை யஷ்விதா சில்வர் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறாள். பாத்திரத்தை தலையில் கவிழ்த்து விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக பாத்திரத்தின் வாய்ப்பகுதி குழந்தையின் தலைப் பகுதியில் சிக்கிக் கொண்டது.

பெற்றோர் எவ்வளவோ முயன்றும் அதனை அகற்ற முடியாத நிலையில், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அச்சத்திலும் வலியிலும் குழந்தை அலறித் துடித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி குழந்தைக்கு சிறு காயம் கூட நேராமல் பாத்திரத்தை லாவகமாக அகற்றினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments