மினி பேருந்து ஓட்டுநர், நடத்துநரை அரிவாளால் தாக்கிய சம்பவம்.. தலைமறைவாக இருந்த ரௌடி ஹரியை கைது செய்த போலீசார்

0 2242
மினி பேருந்து ஓட்டுநர், நடத்துநரை அரிவாளால் தாக்கிய சம்பவம்.. தலைமறைவாக இருந்த ரௌடி ஹரியை கைது செய்த போலீசார்

கும்பகோணத்தில் மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அரிவாளால் தாக்கிய ரௌடி கைது செய்யப்பட்டான்.

கடந்த வியாழக்கிழமை இரவு கும்பகோணத்தில் மினி பேருந்து ஒன்றில் பயணித்த ஹரி என்பவன், தாம் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தவில்லை எனக் கூறி, ஓட்டுநரையும் நடத்துநரையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பினான். 

பேருந்தில் பயணித்தவர்களை பீதியில் ஆழ்த்திய இந்த சம்பவம் குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஹரியைத் தேடி வந்த போலீசார், கும்பகோணம் மாதா கோவில் அருகே பதுங்கி இருந்தவனை கைது செய்தனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய அரிவாளையும் அரிவாளையும் அவனிடமிருந்து கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments