பிரமோஸ் ஏவுகணைகளை ஏவுவது பற்றி பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பயிற்சி

0 1359
பிரமோஸ் ஏவுகணைகளை ஏவுவது பற்றி பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பயிற்சி

பிரமோஸ் ஏவுகணைகளை ஏவுவது குறித்து பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பயிற்சியளிக்க உள்ளது.

அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையான பிரம்மோஸ்-ஐ பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு 375 மில்லியன் டாலர் மதிப்பில் விற்க கடந்த ஜனவரியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தரும் பிலிப்பைன்ஸ் ராணுவ அதிகாரிகளுக்கு ஜூலை மாதத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், டெல்லி மற்றும் ஐதரபாத்தில் இரு மாதங்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பின் முதல் தொகுப்பு அடுத்த 18 மாதங்களில் பிலிப்பைன்சிற்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments