பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரௌடி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரௌடி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை
பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ரௌடி மர்ம நபர்களால் கொடூரமாகக் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்ற அந்த நபர், கடந்த 2 ஆண்டுகளில் 2 சிறுவர்களை கொடூரமாகக் கொன்று புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
ஜாமீனில் வெளிவந்த அபினேஷ், கோட்டக்குப்பத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தவாறு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்தான்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் அபினேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். அவனது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments