சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.!

0 1463

சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மேயர் சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2 கோடி ரூபாயும், மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வார்டு மேம்பாட்டு நிதியாக 35 இலட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட அறிக்கையை நிதி மற்றும் வரி விதிப்புக் குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார். மாநகராட்சி மேயர் பிரியா 64 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னையில் தனியார் பங்களிப்புடன் ஆயிரம் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு 7 கோடியே 50 இலட்ச ரூபாய் செலவில் சீருடைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவியருக்கு 9 கோடியே 91 இலட்ச ரூபாய் செலவில் தற்காப்புப் பயிற்சி வழங்கப்படும் என்றும், மாநகராட்சிப் பள்ளிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments