கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வி.!

0 5987

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.

தென்கொரியாவில் உள்ள சன்சியான் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று போட்டியில், தென்கொரிய வீராங்கனை அன் சி-யங் - ஐ எதிர்கொண்ட சிந்து, 14-21, 17-21 என்ற நேர் செட் கணக்கிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில், இந்தோனேஷிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டி-யை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், 19-21, 16-21 என்ற நேர் செட் கணக்கிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments