நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்த 5 ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பிஎம்டபள்யூ காரை பரிசளித்த உரிமையாளர்

0 12692

சென்னையில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், தன்னுடன் இணைந்து நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த 5 ஊழியர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபள்யூ சொகுசுக்காரை பரிசளித்துள்ளார்.

கந்தன்சாவடியில் இயங்கி வரும் கிஸ்ஃபுளோ என்ற ஐடி நிறுவனம் சிறிய அளவில் தொடங்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் தற்போது 10-வது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நிறுவனம் துவங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆன நிலையில், ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்த ஊழியர்கள் 5 பேரை தேர்வு செய்து கெட்டூகெதர் இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு பிஎம்டபள்யூ காரை சர்பிரைஸாக பரிசளித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உரிமையாளருமான சுரேஷ் சம்பந்தம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments