மேலவைத் தேர்தலில் வாக்களித்தார் யோகி ஆதித்யநாத்.!

0 1288

உத்தரப் பிரதேசத்தில் 36 சட்ட மேலவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மேலவையில் பாஜக பெரும்பான்மை பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

100 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசச் சட்ட மேலவைக்கு 36 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.

கோரக்பூரில் வாக்களித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச வரலாற்றிலேயே 40 ஆண்டுகளுக்குப் பின் ஆளுங்கட்சி சட்டமேலவையில் பெரும்பான்மை பெற உள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 12ஆம் நாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments