லஸ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்லா சயீதைப் பயங்கரவாதியாக இந்தியா அறிவிப்பு.!

0 1515

லஸ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்லா சயீதைப் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது.

2008 நவம்பரில் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீது. அவனது மகன் ஹபீஸ் தல்லா சயீதும் லஸ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஆள்தேர்வு செய்வது, இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவது, நிதியுதவி செய்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதனால் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டப்படி ஹபீஸ் தல்லா சயீதைப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments