மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதங்களில் பட்டம் வழங்க வேண்டும் - யு.ஜி.சி

0 7587

கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்கிட வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி  பிறப்பித்த உத்தரவில்,  6 மாதங்களுக்குள் மாணவர்களுக்கு பட்டம் வழங்காத உயர்கல்வி நிறுவனங்களின் மீது விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாமதமாக பட்டம் வழங்குவதால் , வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படுத்துவதாக மாணவர்கள் தொடர்ந்து அளித்து வந்த புகாரின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக யு.ஜி.சி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments