இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக் கொலை

0 4060

கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர், டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மைத்துறை பயின்று வந்தார். கடந்த வியாழக்கிழமை Sherbourne சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் வாசுதேவ் கொல்லப்பட்டதாக கனடாவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொலைக்கான காரணம் தெரியவில்லை என கார்த்திக்கின் உறவினர் தெரிவித்துள்ளார். கார்த்திக் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கார்த்திக்கின் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இரங்கல் தெரிவித்து உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments