”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்”.... இலங்கையில் அடக்குமுறைக்கு காத்திருந்த போலீசாருக்கு ரோஜாவை பரிசளித்த மாணவி

0 1369

இலங்கையில் அடக்குமுறைக்கு எதிராக அன்பைப் பரிசளித்த பெண்ணின் வீடியோ வெளியாகி உள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் எதிர்ப்பு பேரணி நேற்று நடந்தது. களனி என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடச் சென்றனர்.

அப்போது அவர்களைத் தடுக்கும் விதமாக சாலைத் தடுப்புகளை வைத்திருந்த போலீசார் கலவர எதிர்ப்பு வாகனத்தையும் நிறுத்தியிருந்தனர். அப்போது கையில் ஒற்றை ரோஜாவை ஏந்தியவாறு சென்ற மாணவி ஒருவர் அதனை காவலர்களிடம் நீட்டினார்.

முதலில் யார் வாங்குவது என்பது போல காவல்துறையினர் அமைதியாய் நிற்க.... அந்த மாணவியும் கையில் ரோஜாவை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தார். இறுதியில் காவல் துறை அதிகாரி ஒருவர் ரோஜாவைப் பெற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments