மழைக்கு புளிய மரத்தின் கீழ் ஒதுங்கிய 3 நண்பர்கள்.. திடீரென இடி தாக்கியதில் இருவர் பலி, ஒருவர் படுகாயம்

0 2563
மழைக்கு புளிய மரத்தின் கீழ் ஒதுங்கிய 3 நண்பர்கள்.. திடீரென இடி தாக்கியதில் இருவர் பலி, ஒருவர் படுகாயம்

பெரம்பலூர் அருகே மழைக்காக புளிய மரத்தின் அடியில் 3 நண்பர்கள் ஒதுங்கிய நிலையில், திடீரென இடி தாக்கியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.

இந்நிலையில், ஆத்தூர் செல்லும் சாலையில், கோனேரிப்பாளையம் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கம்பன் நகரைச் சேர்ந்த செல்லதுரை மற்றும் கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமர் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த வெங்கடேஷ் என்பவர் மருத்துவமனையில் சிகிச் பெற்று வருகிறார்.

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் வயலில் கட்டிவைக்கப்பட்ட குமார் என்பவருக்கு சொந்தமான 2 பசுக்கள் இடி தாக்கியதில் உயிரிழந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments