எழுந்து வா அருண்.. சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்.. கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் இளம்பெண்

0 2467
எழுந்து வா அருண்.. சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்.. கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் இளம்பெண்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, தனது ஒரு மாத கைக் குழந்தையை பார்க்க ஆசை ஆசையாய் சென்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

கே.அத்திக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அருண்குமார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மாத கைக்குழந்தை இருக்கும் நிலையில், தாய் வீட்டில் வசித்து வரும் லாவண்யாவையும் குழந்தையையும் பார்ப்பதற்காக நேற்றிரவு பணியை முடித்துவிட்டு அருண்குமார் பைக்கில் சென்றிருக்கிறார்.

புதூர் அருகே அவரது பைக் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அருண்குமாரின் உடலை பார்த்த லாவண்யா, தனது கைக்குழந்தையை கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments