தன்னைப் பார்த்து குரைத்த நாயை டியூப்-லைட்டால் தாக்கிய நபர்.. தட்டிக்கேட்ட தாய், இரு மகன்களுக்கு கத்திக்குத்து

0 1181
தன்னைப் பார்த்து குரைத்த நாயை டியூப்-லைட்டால் தாக்கிய நபர்.. தட்டிக்கேட்ட தாய், இரு மகன்களுக்கு கத்திக்குத்து

சென்னையில், வளர்ப்பு நாயை டியூப்லைட்”டால் தாக்கிய நபரை தட்டிக்கேட்டதற்காக, தாயும், இரு மகன்களும் கத்தியால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புது வண்ணாரப்பேட்டையில், திவாகர் என்பவர் வளர்த்த நாய் எதிர் வீட்டில் வசிக்கும் தனசேகர் என்பவரை பார்த்து குரைத்த போது குடிபோதையில் இருந்த தனசேகர் நாயை டியூப்லைட்-டால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

திவாகர், அவரது தம்பி ரித்தீஷ் மற்றும் தாயார் ராஜலட்சுமி, மூவரும் சேர்ந்து தனசேகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பாக முற்றவே தனசேகர் வீட்டில் இருந்த பட்டன் கத்தியால் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ராஜலட்சுமி மற்றும் அவரது மகன்கள், தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments